`டீ` எனப்படும் `தேநீர்` நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக` அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக்கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ` தவிர பல்வேறு வகையான டீக்கள் உண்டு. அவற்றின் மகத்துவங்கள் இங்கே...
* சூடான லவங்கப்பட்டை டீ, பெண்க ளுக்கு அற்புதம் நிகழ்த்தும். இது மனஅழுத்தத்துக்கு நல்லது. தளர்விலிருந்து உடம்பு விடுபட்டுச் சுதந்திரமாக உணர உதவும். மேலும், சுவாசம், செரிமானம் மற்றும் ரத்த சுத்திகரிப்பு ஆகியவற்றுக்கும் உதவுகிறது.
*ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு `மசாலா டீ`யும், `சிலோன் டீ`யும் இதமளிக்கும்.
*`கிரீன் டீ`யில் உள்ள `பாலிபினால்கள்` அல்லது `பிளேவனாய்டுகள்` ஒட்டுமொத்த உடல்நலத் துக்கு நல்லது. குறிப்பாக புற்றுநோய் வராமல் தடுப்பதில். புற்றுநோய் போன்ற ஆபத்து களுக்குக் காரணம், செல்களின் சிதைவாகும். அதைத்தடுக்கும் பணியில் டீயில் உள்ள `ஆன்டிஆக்சிடன்ட்கள்` உதவுகின்றன.
*`மூலிகை டீ`யில் `டேனின்` இல்லை. எனவே நெருக்கடியான வாரம் அல்லது அதிகமான அழுத்தங்களின்போது மூலிகை டீ அருந்த லாம். மூலிகை டீயில் தேர்ந்தெடுப்பதற்கு அதிக வகைகள் உள்ளன என்பதும் மகிழ்ச் சிக்குரிய செய்தி.
* `இஞ்சி டீ` கொஞ்சம் காரசாரமாக இருந்தாலுமë, இதமான உணர்வைக் கொடுக்கும். பசியைத் தூண்டும். வாந்தி உணர்வைத் தடுக்கும். அதிகமாகப் புத்துணர்வு அளிக்கும்- குறிப்பாகப் பெண்களுக்கு.
*`அஸ்வகந்தா டீ` மனநிலையை உயர்த்தும், மனதுக்கும் உடம்புக்கும் ஓர் துடிப்பை ஏற்படுத்தும். தவிர நல்ல பலத்தைக் கொடுப்பதுடன், நோய்கள், கட்டிகள், ஞாபக இழப்பு ஆகியவற்றைத் தடுக்கும். மனநிலைக்கு ஊக்க சக்தி அளிக்கும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.
* டீயுடன் `ஸ்வீட் ரூட்` அல்லது `லீகோரைஸை` சேர்த்தால் வழுக்கை, பொடுகு, பற்சிதைவு, தொண்டைப் புண், காசநோய், உடம்பு துர்நாற்றம், மனஅழுத்தம், சோர்வு, தூக்கமில்லாமை, ஜலதோஷம் ஆகிய பாதிப்புகளைக் குறைக்கும்.
* ஏலக்காய் டீயை எவர் விரும்பமாட்டார்? அது இதமளிக்கும், வாநëதி உணர்வைத் தடுக்கும், ஜலதோஷம், இருமலுக்கு மிகவும் ஏற்றது. மனஅழுத்தத்தைக் குறைத்து உடலுக்குப்புத்துயிர் அளிக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக ஏலக்காய் டீ நல்லசுவையாகவும் இருக்கும்.