சராசரியிலிருந்து ஆறு திட்டவிலக்கங்களைக் குறிப்பதே Six Sigma ஆகும். s என்பது கிரேக்க மொழியில் புள்ளியியலில் திட்டவிலக்கத்தை குறிப்பிடுவதாகும்.
செயல்படுதிறனை மேம்படுத்துவதற்கும், தவறுகளை பெருமளவு குறைப்பதற்குமான தொழிநுட்பங்களையும், கருவிகளையும் Six Sigma வழிமுறைகளை அளிக்கின்றது. இந்த வழிமுறைகள் எல்லா செயலாக்கங்களுக்கும் (Process) பொருந்தும்.
இது முதன்முதலில் மோட்டோரோலா (Motorola)-வில் பயன்படுத்தப்பட்டது. இதன் உற்பத்தித் துறையில் கோடிக்கணக்கான பொருட்கள் ஒரே மாதிரியான வழிமுறைகள் திரும்ப திரும்ப பயன்படுத்தி உருவாக்கப்பட்டன. இறுதியில் Six Sigma வளர்ச்சி பெற்று, தற்போது உற்பத்தி சாரா துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா துறைகளிலும் உதாரணமாக மருத்துவம், அழைப்பு மையங்கள், மென்பொருள், காப்பீடு போன்ற துறைகளில் Six Sigma அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் தவறுகளை பெருமளவு குறைத்தலே. தவறுகள் மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே இருத்தல் வேண்டும். அதனை அடையும் வழிமுறைகள் Six Sigma விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
Six Sigma வழிமுறைகள் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வழிமுறைகளை தொடர்ச்சியாக மறுமதிப்பீடு செய்வதனாலும், மறு சீர்மை செய்வதனாலும் மேம்படுத்தப்படுகிறது. இதனை அடைவதற்கு Six Sigma DMAIC என்ற வழிமுறையை பயன்படுத்துகிறது.
• Define Opportunities- வாய்ப்புகளை வரையறுத்தல்
• Measure Performance-செயல்திறன் அளவிடல்
• Analyze Opportunity- வாய்ப்புகளை பகுத்தாய்தல்
• Improve Performance- செயல்திறன் உயர்த்துதல்
• Control Performance- செயல்திறன் கட்டுப்படுத்துதல்
Six Sigma வழிமுறைகள் (methodology), அடிப்படை நிலையிலிருந்து ஒரு புதிய வணிக செயலாக்கத்தை (Business Process) உருவாக்குவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். Design for Six Sigma (Six Sigma-வுக்கான வடிவமைப்பு ) –ன் கொள்கைகளை பயன்படுத்துவதன் மூலம் மேற்கூறியவற்றை அடைவதோடு தவறுகளை குறைப்பதற்கான வாய்ப்புகளையும் கண்டறியலாம். ஒரு பொருள் உற்பத்தியில் அல்லது சேவை செயல்பாட்டில் 10-இலட்சித்திற்கு வெறும் 3.4 தவறுகளை மட்டுமே Six Sigma அனுமதிக்கிறது.
தவறுகளை குறைப்பதற்கும் தரத்தினை அளவிடுவதற்கும் Six Sigma அதிகன்படியாக புள்ளியியல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்துகிறது. Six Sigma(Green Belt-பச்சை பட்டை, Black Belt-கருப்பு அட்டை பெற்றவர்கள்) நிபுணர்கள் வணிக நடைமுறைகளை மதிப்பீடு செய்து அதனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதற்கான வழி மற்றும் வழிமுறைகளை எடுத்துரைப்பார்கள். இவர்கள் DFSS கொள்கைகளை பயன்படுத்தி ஒரு புதிய வணிக நடைமுறையையும், வடிவமைப்பார்கள். வழக்கத்தில் இருக்கும் நடைமுறைகளை மறுசீர்மை செய்வதைவிட DFSS கொள்கைகளை பயன்படுத்தி ஒரு புதிய வணிக நடைமுறையை உருவாக்குவது எளிமையானதாகும். வணிகம், புள்ளியியல் மற்றும் பொறியியலில் பயன்படுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகளையும் தொழில்நுட்பங்களையும் Six Sigma ஒருங்கே பயன்படுத்திக் கொள்கிறது. நடைமுறை வெளியீட்டின் செயல்படுதிறனை மேம்படுத்துவதற்கும், மாற்றங்களை குறைப்பதற்கும், சீரான தரத்தை தொடர்ச்சியாக்கவும் வழிகோலுகிறது.
வணிக நடைமுறை மேலாண்மை, உற்பத்தியை சார்ந்துதான் இருக்க வேண்டும் என்றில்லை. இன்றைய உலகில் Six Sigma-வினை பயன்படுத்தும் வணிக நடைமுறை மேலாண்மை பொதுவாக அழைப்பு மையங்களாகவும், வாடிக்கையாளர் சேவை நிறுவனங்களாகவும், திட்ட மேலாண்மை நிறுவனங்களாகவும் இருக்கின்றன.
Six Sigma-ன் முக்கிய கருத்துருக்கள் :
• வாடிக்கையாளர் திருப்தி
• தர வடிவமைப்பு
• மதிப்பீடு மற்றும் அளவிடுதல்
• பணியாளரின் ஈடுபாடு மற்றும்
• தொடர்ச்சியான வளர்ச்சி
Six Sigma என்பது பொதுவாக அறிவு பகிர்தலாகும் (Knowledge Sharing). ஒரு நிறுவனம் ஒன்றிற்கு மேற்பட்ட உற்பத்தி நிலையங்களை கொண்டிருப்பின், ஒரு உற்பத்தி நிலையம் மற்றதைவிட அதிக தரத்தில் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் Six Sigma குழு இந்த அதிக தரத்திலான பொருட்களை உற்பத்தி நிலையத்தினை பார்வையிட்டு எந்தவகையில் அவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் தரமாக பொருட்கள் உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் கண்டறியும். அதற்கேற்ப மற்ற உற்பத்தி நிலையங்களிலும் இதனை நடைமுறைப்படுத்தும்.
எல்லா பணியாளர்களையும் ஈடுபாடு கொள்ளச் செய்வது Six Sigma-ல் மிக முக்கியமானதாகும். நிறுவனம் தன்னிடத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களையும் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் பணியாளர்கள் தங்களின் திறமையினை வளர்த்துக் கொள்வதற்கும் அதன் மூலம் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதற்கும் ஊக்குவிக்க வேண்டும். இதற்காக அவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப்பட வேண்டும். GE, Motorola என பல்வேறு பெரிய நிறுவனங்கள் Six Sigma-வை கட்டாயமாக்கியுள்ளன. இதனால் தவறுகள் பெருமளவு குறைக்கப்பட்டு, வாடிக்கையாளர் திருப்தி அதிகரிக்கிறது. நிறுவனத்தின் பெயர், தரம், வருவாய் குறிப்பிடும்படியான வளர்ச்சியினை எட்டுகிறது.